ஆரோக்கியம்

எண்ணெய் மற்றும் மருத்துவக் குணங்கள்

Published

on

நல்லெண்ணெய்

எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. உலர் சருமம் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல்லது.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பாதம் எண்ணெய்

உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ’ சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணை

சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

வேப்ப எண்ணை

சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப எண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

கடுகு எண்ணை

சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version