Connect with us

ஆரோக்கியம்

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

Published

on

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

🟢🟢🟡🟢🟢🟡🟢

*🟣அகத்திக்கீரை-*

*✍️ இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.*

*🟣காசினிக்கீரை-*

*✍️ சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.*

*🟣சிறுபசலைக்கீரை-*

*✍️ சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.*

*🟣பசலைக் கீரை-*

*✍️ தசைகளை பலமடையச் செய்யும்.*

*🟣கொடிபசலைக் கீரை-*

*✍️வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.*

*🟣மஞ்சள் கரிசலை-*

*✍️கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.*

*🟣குப்பைகீரை-*

*✍️பசியைத் தூண்டும்.வீக்கம் வத்த வைக்கும்.*

*🟣அரைக் கீரை-*

*✍️ ஆண்மையை பெருக்கும்.*

*🟣புளியங்கீரை-*

*✍️ சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.*

💛*பிண்ணாருக்குகீரை-*

*✍️ வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.*

*🟣பரட்டைக் கீரை-*

*✍️ பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.*

*🟣பொன்னாங் கன்னி கீரை-*

*✍️உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.*

*🟣சுக்கா கீரை-*

*✍️இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.*

*🟣வெள்ளை கரிசலைக்கீரை-*

*✍️ இரத்த சோகையை நீக்கும்.*

*🟣முருங்கைக்கீரை-*

*✍️ நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.*

*🟣வல்லாரை கீரை-*

*✍️ மூளைக்கு பலம் தரும்.*

*🟣முடக்கத்தான்கீரை-*

*✍️ கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.*

*🟣புண்ணக் கீரை-*

*✍️ சிரங்கும், சீதளமும் விலக்கும்.*

*🟣புதினாக்கீரை-*

*✍️ இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.*

*🟣நஞ்சு முண்டான் கீரை-*

*✍️விஷம் முறிக்கும்.*

*🟣தும்பை கீரை-*

*✍️ அசதி, சோம்பல் நீக்கும்.*

*🟣கல்யாண முருங்கைகீரை*

*✍️சளி, இருமலை நீக்கும்.*

*🟣முள்ளங்கிகீரை-*

*✍️நீரடைப்பு நீக்கும்.*

*🟣பருப்புக் கீரை-*

*✍️ பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.*

*🟣புளிச்ச கீரை-*

*✍️ கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.*

*🟣மணலிக்கீரை-*

*✍️வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.*

*🟣மணத்தக்காளி*

*✍️ கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.*

*🟣முளைக்கீரை-*

*✍️ பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.*

*🟣சக்கரவர்த்தி கீரை-*

*✍️தாது விருத்தியாகும்.*

*🟣வெந்தயக்கீரை-*

*✍️ மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.*

*🟣தூதுவலை-*

*✍️ ஆண்மை தரும். சரும நோயை விலக்கும். சளித் தொல்லை நீக்கும்.*

*🟣தவசிக்கீரை-*

*✍️இருமலை போக்கும்.*

*🟣சாணக்கீரை-*

*✍️காயம் ஆற்றும்.*

*🟣வெள்ளைக்கீரை-*

“*✍️தாய்பாலை பெருக்கும்.*

*🟣விழுதிக்கீரை-*

*✍️பசியைத் தூண்டும்.*

*🟣கொடிகாசினிகீரை-*

*✍️ பித்தம் தணிக்கும்.*

*✍️துயிளிக்கீரை-*

வெள்ளை வெட்டை விலக்கும்.*

*🟣துத்திக்கீரை*

*✍️வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.*

*🟣காரகொட்டிக்கீரை*

*✍️மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.*

*🟣மூக்கு தட்டைகீரை*

*✍️சளியை அகற்றும்.*

*🟣நருதாளிகீரை-*

*✍️ ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.*

*🙏🙏🙏🙏🙏🙏🙏*

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

எண்ணெய் மற்றும் மருத்துவக் குணங்கள்

Published

on

நல்லெண்ணெய்

எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. உலர் சருமம் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல்லது.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பாதம் எண்ணெய்

உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ’ சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணை

சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

வேப்ப எண்ணை

சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப எண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

கடுகு எண்ணை

சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது….

Continue Reading

Trending

Copyright © 2024 by 7Tamil Media, All rights reserved.