சோடசக்கலை நேரம் 11.6.2025 புதன்கிழமை மதியம் 12.53 முதல் 2.53 வரை
சோடசக்கலை நேரம் பற்றிய பதிவுகள் :
நம்முடைய கஷ்ட காலங்களுக்கு விடிவு காலம் பிறக்க, சித்தர்களால் இந்த பிரபஞ்சத்திற்கு நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த சோடசக்கலை நேரம். பௌர்ணமி திதி முடியும் தருணத்திலும், அமாவாசை திதி முடியும் தருணத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும். அந்த நேரத்தை தான் சோடசக்கலை நேரம் என்று சொல்லுவார்கள்.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம், அந்த இறைவனிடம் என்ன வேண்டுதலை வைத்தாலும் அது நமக்கு உடனே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இறை சக்தியும், நேர்மறை ஆற்றலும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில், வரக்கூடிய சோடசக்கலை நேரத்தை யாருமே தவறவிடாதீர்கள்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.
குறிப்பிட்டு சொல்லப்படும் இந்த சோடசக்கலை நேரத்தில் உங்களுடைய வீட்டில் வரவேற்பறை அல்லது பூஜை அறை எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்ளலாம். கிழக்கு பார்த்தவாறு கீழே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாசனை மிகுந்த ஊதுபத்தியை ஏற்றி வைத்துவிட்டு சம்மணம் போட்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, உங்களுடைய ஆழ்மனதில் நம்பிக்கையுடன் நேர்மறையுடன் வேண்டுதலை வைக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் நிச்சயம் இருக்கக் கூடாது.
இந்த நேரத்தில் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அதில் இருந்து ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆழ் மனதில் உச்சரித்து தியான நிலையில் அந்த ஒரு நல்ல விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடமும் உங்கள் குலதெய்வத்திடமும் கேளுங்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அதி அற்புதம் வாய்ந்த சோடசக்கலை நேரம் நமக்கு இருக்கின்றது. உங்களால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு நேரம் தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைக்க முடிந்தாலும் வைக்கலாம். முழுநேரமும் அமர்ந்து வேண்டுதல் வைக்க முடியாது என்பவர்கள் 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை பொய்த்துப் போவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் சோடசக்கலை நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.
♥️ நீங்கள் லட்சுமி கடாட்சம் பெற்று பணக்காரர் ஆகவும், எப்போதும் நிரந்தர பணக்காரர்களாக இருக்கவும்…………
♥️ உங்கள் மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதம் அன்ன தானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்ன தானம் செய்து விடுங்கள்.
♥️ வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
♥️ தெய்வத்திடம் நீங்கள் வேண்டும் கோரிக்கை (திருமணம்,
பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத் தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும்) ஏதாவது ஒரு கோரிக்கை மட்டும் கூறி சோடசக் கலை நேரத்தில் தியானம் அல்லது மந்திர ஜபம் இருக்க வேண்டும்.
♥️ அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஆரம்பித்து திதி முடிந்து ஒரு மணி நேரம் வரை 2 மணி நேரம் தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.
♥️ இந்த இரண்டு மணி நேர சோடசக்கலை நேரத்தில் ஏதாவது ஒரு 5 நொடிப் பொழுதுகள் திரு மூர்த்தி(மும்மூர்த்தி ) இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் தனது அருளை பொழிகிறார்.
♥️ தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.
அது உங்கள் உடல் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிக்கும் வலிமையைப் பொறுத்தது.
♥️ கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
♥️ ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
♥️ இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள், செல்வந்தர்களில் பலரும் அவர்களுக்கு வேண்டியதை பெற்று சிறப்பான நிலையில் இருக்கிறார்கள் .
♥️ வடகிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் அல்லது ஜபம் செய்யவேண்டும். வெறும் தரையில் உட்காரக்கூடாது.
வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரான நிலையைத் தரும்) .
நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.
உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது.
♥️ மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.
அகத்தியரின் வசிய மந்திரமான “ஓம் ரிங் வசி வசி” என மனதுக்குள் சொல்லி உங்கள் சங்கல்பம் நிறைவேற பிரார்த்தனை செய்யுங்கள்…!
பிரார்த்தனை முடிந்ததும் இனிப்பை ஏதாவதொரு உயிரினத்துக்கு குறிப்பாக எறும்புகளுக்கு அளியுங்கள்…!
🤘ஓம் நமசிவாய🙏